• Nov 23 2024

தேராவில் குளத்து மேலதிக நீரினால் இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு

Chithra / Feb 25th 2024, 5:18 pm
image

 

தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட செயலரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரினால் குளத்துக்கு அருகில் இருந்த 17 குடும்பங்களும் பாதிக்கப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் தங்கிவரும் நிலையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


தேராவில் குளத்து மேலதிக நீரினால் இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு  தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட செயலரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரினால் குளத்துக்கு அருகில் இருந்த 17 குடும்பங்களும் பாதிக்கப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் தங்கிவரும் நிலையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement