• Jul 06 2025

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

Chithra / Jul 6th 2025, 1:26 pm
image


தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (07) முதல் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை செயற்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 8 ஆம் திகதி பணியிட விபத்து தடுப்பு நாளாகவும், 

ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 10 ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்துக்களை தடுப்பதற்காகவும், ஜூலை 11 ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் விபத்துகளைத் தடுப்பதற்கான நாளாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த காலகட்டத்தில், விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு இடங்களை ஆய்வு செய்தல் மற்றும் எதிர்காலத்தில் விபத்து அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர் வைத்திய சிகிச்சை தேவைப்படும் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளார். 


நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம் தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (07) முதல் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை செயற்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 8 ஆம் திகதி பணியிட விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 10 ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்துக்களை தடுப்பதற்காகவும், ஜூலை 11 ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் விபத்துகளைத் தடுப்பதற்கான நாளாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு இடங்களை ஆய்வு செய்தல் மற்றும் எதிர்காலத்தில் விபத்து அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர் வைத்திய சிகிச்சை தேவைப்படும் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement