• Sep 19 2024

ஓயாத முயற்சிகளின் பலனாக கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு! – டக்ளஸ்

Chithra / Jan 4th 2023, 4:01 pm
image

Advertisement


கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாகவே, அறுவடையின் பின்னர் பழுதடையும் கடலுணவுகளின் தொகையை குறைப்பதற்கான குளிரூட்டல் பொறிமுறை உருவாக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிதார்.

அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணவுகளின் அளவினை குறைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் கடற்றொழிலாளர்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீன்பிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘கடலுணவுகள் அநியாயமாக விரயமாவதை குறைத்து, கடற்றொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கு உதவிய செய்த, கடற்றொழில் அமைச்சு திணைக்களக்களுக்கும், ஏனைய துறைசார் திணைங்களுக்கும் இவ்விடத்தில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

எங்களுடைய கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் ஏனைய பல பிரச்சினைகள் இருக்கின்றன.

அந்தப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை தேடிக்கொண்டு அதற்கான கண்டுபிடிப்புகளையும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு, மண்ணெண்ணை பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட, கிட்டத்தட்ட 27 ஆயிரம் மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதில் பல்வேறு பிரச்சினைகள் கடற்றொழிலாளர்களினால் எதிர்கொள்ளப்படுகின்றன. இதனால் நுகர்வோருக்கு பொருத்தமானதும் தொழிலாளர்களுக்கு பொருத்தமானதுமான புதிய கண்டுபிடிப்பொன்றை செய்திருக்கின்றோம்.

அதாவது மண்ணெண்ணெய்க்கான செலவுகளைக் குறைத்து 86 ரூபாவிலிருந்து 800 ரூபா வரையிலான தொழிலுக்கான முயற்சியை நாம் செய்திருக்கிறோம். அதனையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

அதேபோன்று, எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடலுணவுகளை அறுவடை செய்வதில் குறைபாடுகள் நிலவுவதுடன் கடல் வளங்களும் குறைந்து வருகின்றன.

அவற்றை எதிர்கொள்ளும் வகையிலான முகாமைத்துவத்தையும் நீர்வேளாண்மையிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறோம்.

அதுபோல் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் அடிக்கடி என்னுடன் பேசும்போது உள்ளுர் குளங்கள், ஆறுகளில் மீன் வளர்ப்பு தொடர்பாக அபிப்பிராயத்தையும் உற்சாகத்தையும் வழங்கி வருகிறார்கள்.அதற்கு தேவையான நிதி உதவிகளையும் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


ஓயாத முயற்சிகளின் பலனாக கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு – டக்ளஸ் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாகவே, அறுவடையின் பின்னர் பழுதடையும் கடலுணவுகளின் தொகையை குறைப்பதற்கான குளிரூட்டல் பொறிமுறை உருவாக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிதார்.அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணவுகளின் அளவினை குறைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் கடற்றொழிலாளர்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீன்பிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘கடலுணவுகள் அநியாயமாக விரயமாவதை குறைத்து, கடற்றொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கு உதவிய செய்த, கடற்றொழில் அமைச்சு திணைக்களக்களுக்கும், ஏனைய துறைசார் திணைங்களுக்கும் இவ்விடத்தில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கின்றேன்.எங்களுடைய கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் ஏனைய பல பிரச்சினைகள் இருக்கின்றன.அந்தப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை தேடிக்கொண்டு அதற்கான கண்டுபிடிப்புகளையும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம்.உதாரணத்திற்கு, மண்ணெண்ணை பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட, கிட்டத்தட்ட 27 ஆயிரம் மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதில் பல்வேறு பிரச்சினைகள் கடற்றொழிலாளர்களினால் எதிர்கொள்ளப்படுகின்றன. இதனால் நுகர்வோருக்கு பொருத்தமானதும் தொழிலாளர்களுக்கு பொருத்தமானதுமான புதிய கண்டுபிடிப்பொன்றை செய்திருக்கின்றோம்.அதாவது மண்ணெண்ணெய்க்கான செலவுகளைக் குறைத்து 86 ரூபாவிலிருந்து 800 ரூபா வரையிலான தொழிலுக்கான முயற்சியை நாம் செய்திருக்கிறோம். அதனையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.அதேபோன்று, எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடலுணவுகளை அறுவடை செய்வதில் குறைபாடுகள் நிலவுவதுடன் கடல் வளங்களும் குறைந்து வருகின்றன.அவற்றை எதிர்கொள்ளும் வகையிலான முகாமைத்துவத்தையும் நீர்வேளாண்மையிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறோம்.அதுபோல் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் அடிக்கடி என்னுடன் பேசும்போது உள்ளுர் குளங்கள், ஆறுகளில் மீன் வளர்ப்பு தொடர்பாக அபிப்பிராயத்தையும் உற்சாகத்தையும் வழங்கி வருகிறார்கள்.அதற்கு தேவையான நிதி உதவிகளையும் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement