முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைக்க தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக அறிவித்த ஜனாதிபதி, அதற்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது யாழ்.பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. .
வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு- ஜனாதிபதி உறுதி.samugammedia முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும், வடக்கு மாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைக்க தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக அறிவித்த ஜனாதிபதி, அதற்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த சந்திப்பின் போது யாழ்.பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. .