• Jan 09 2025

ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு சிலர் முயற்சி; ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு..!

Sharmi / Dec 30th 2024, 9:21 am
image

ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்த படியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். 

எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது. மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டும்.

கட்சியை விட்டு சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியை பணயக்கைதியாக பயன்படுத்த இடமளிக்க முடியாது. 

இந்நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். 

எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு சிலர் முயற்சி; ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்த படியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது. மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டும்.கட்சியை விட்டு சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியை பணயக்கைதியாக பயன்படுத்த இடமளிக்க முடியாது. இந்நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement