• Dec 09 2024

பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்கும் சில தமிழ் கட்சிகள்?

Chithra / Sep 26th 2024, 12:27 pm
image

 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சில சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பதிவு செய்யப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதை விட, தமிழ் மக்களின் நலன் கருதி அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்கும் சில தமிழ் கட்சிகள்  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சில சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதிவு செய்யப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதை விட, தமிழ் மக்களின் நலன் கருதி அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement