• Apr 19 2026

போதையில் தாயை கொன்ற மகன் - மட்டக்களப்பில் பயங்கரம்!

shanu / Apr 18th 2026, 11:25 pm
image

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி பகுதியில் தாய் ஒருவர் மகனால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.


சித்தாண்டி-04 கிராமசேவகர், பழைய சந்தை வீதி, வேலாயுதம் வீதியில் வசிக்கும் குமாராசாமி வசந்தா (வயது 39) என்பவரரே கொலை செய்யப்பட்டுள்ளார்.


நான்கு குடும்ப அங்கத்தவரைக் கொண்ட வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் தாய் 23 மற்றும் 22 வயதுடைய மகன்கள். குறித்த வீட்டில்  குடி போதையினால் தாய் மகன்களிடையே தொடர்ச்சியாக வீட்டில் சண்டை இடம்பெறுவதாக அயலவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.


மன உளச்சலுக்கு ஆளான இளைய மகன் குகேந்திரன் (வயது 22) என்பவர் இரண்டு கிழமைக்கு முன்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அதன் பின்னர் வீட்டில் மூத்த மகன் (வயது 23) ரகேந்திரன் என்பவருடன் தாய் இருந்துள்ளார். இவர் குடிப்பதற்காக தொடர்ச்சியாக தாயிடம் பணம் கேட்டு சண்டை பிடித்துள்ளார்.


நேற்றைய தினமும் குடிப்பதற்கு பணம் கேட்ட நிலையில் தனது தாயை அடித்து கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்தனர்.


கொலைச் சம்பவம் இடம்பெற்ற சற்று நேரத்தில் கொலை செய்யப்பட்ட மகளின் தாய் வீட்டிக்கு வந்த வேளை கொலை செய்த மகன் வீதியால் கத்திக்கொண்டு சென்றதை கண்டுள்ளார். பின்னர் அயலவரிடம் கேட்டபோது தனது தாய் அடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டை திறந்து பார்க்கும்போது இறந்த நிலையில் மகள் கிடந்ததை கண்டுள்ளார்.


பின்னர் சந்திவெளி பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு தடயவியல் பொலிசார், ஏறாவூர் சுற்றுல நீதிமன்ற நீதவான் உள்ளிட்டவர்கள் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.


இதன் பின்னர் சடலம் மேலதிக சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


குறித்த கொலையை மேற்கொண்ட தாயின் மூத்த மகன் நேற்றிரவே சந்திவெளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதையில் தாயை கொன்ற மகன் - மட்டக்களப்பில் பயங்கரம் மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி பகுதியில் தாய் ஒருவர் மகனால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.சித்தாண்டி-04 கிராமசேவகர், பழைய சந்தை வீதி, வேலாயுதம் வீதியில் வசிக்கும் குமாராசாமி வசந்தா (வயது 39) என்பவரரே கொலை செய்யப்பட்டுள்ளார்.நான்கு குடும்ப அங்கத்தவரைக் கொண்ட வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் தாய் 23 மற்றும் 22 வயதுடைய மகன்கள். குறித்த வீட்டில்  குடி போதையினால் தாய் மகன்களிடையே தொடர்ச்சியாக வீட்டில் சண்டை இடம்பெறுவதாக அயலவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.மன உளச்சலுக்கு ஆளான இளைய மகன் குகேந்திரன் (வயது 22) என்பவர் இரண்டு கிழமைக்கு முன்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் பின்னர் வீட்டில் மூத்த மகன் (வயது 23) ரகேந்திரன் என்பவருடன் தாய் இருந்துள்ளார். இவர் குடிப்பதற்காக தொடர்ச்சியாக தாயிடம் பணம் கேட்டு சண்டை பிடித்துள்ளார்.நேற்றைய தினமும் குடிப்பதற்கு பணம் கேட்ட நிலையில் தனது தாயை அடித்து கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்தனர்.கொலைச் சம்பவம் இடம்பெற்ற சற்று நேரத்தில் கொலை செய்யப்பட்ட மகளின் தாய் வீட்டிக்கு வந்த வேளை கொலை செய்த மகன் வீதியால் கத்திக்கொண்டு சென்றதை கண்டுள்ளார். பின்னர் அயலவரிடம் கேட்டபோது தனது தாய் அடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டை திறந்து பார்க்கும்போது இறந்த நிலையில் மகள் கிடந்ததை கண்டுள்ளார்.பின்னர் சந்திவெளி பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு தடயவியல் பொலிசார், ஏறாவூர் சுற்றுல நீதிமன்ற நீதவான் உள்ளிட்டவர்கள் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.இதன் பின்னர் சடலம் மேலதிக சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.குறித்த கொலையை மேற்கொண்ட தாயின் மூத்த மகன் நேற்றிரவே சந்திவெளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement