• Nov 26 2024

வலுவடையவுள்ள தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை; கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! பேராசிரியர் எச்சரிக்கை

Chithra / Jun 9th 2024, 11:34 am
image


தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை எதிர்வரும் சில தினங்களில் வலுவடையவுள்ள நிலையில், கண்டி நகரம் பாரிய வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணப் பணிகளினால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகாவலி கங்கையுடன் கூடிய உயரமான இடத்தில் அமைந்துள்ள கண்டி நகரின், மழை நீர் மற்றும் ஏனைய கழிவு நீர் வெளியேறும் இரண்டு பிரதான கால்வாய்களை அடைக்கும் வகையில் முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், 

சிறு மழை பெய்தாலும் கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கண்டி – வில்லியம் கோபல்லவ மாவத்தையிலிருந்து ஆரம்பமாகி கொட்டம்பேயில் மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய் மற்றும்,

D.S.சேனநாயக்க வீதியில் இருந்து ஆரம்பித்து கடுகஸ்தோட்டை அலி நாவனத்தோட்டை அண்மித்து மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களும் சில வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளமையே இந்த அபாயத்திற்கு காரணம்  என பேராசிரியர் தெரிவித்தார்.

கண்டி நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் குறுகிய நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில், இந்த நகரம் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அபாய நிலைமை தொடர்பில் பொறுப்புவாய்ந்த உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்   பேராசிரியர்   தெரிவித்துள்ளார்

வலுவடையவுள்ள தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை; கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் பேராசிரியர் எச்சரிக்கை தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை எதிர்வரும் சில தினங்களில் வலுவடையவுள்ள நிலையில், கண்டி நகரம் பாரிய வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணப் பணிகளினால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மகாவலி கங்கையுடன் கூடிய உயரமான இடத்தில் அமைந்துள்ள கண்டி நகரின், மழை நீர் மற்றும் ஏனைய கழிவு நீர் வெளியேறும் இரண்டு பிரதான கால்வாய்களை அடைக்கும் வகையில் முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், சிறு மழை பெய்தாலும் கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.கண்டி – வில்லியம் கோபல்லவ மாவத்தையிலிருந்து ஆரம்பமாகி கொட்டம்பேயில் மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய் மற்றும்,D.S.சேனநாயக்க வீதியில் இருந்து ஆரம்பித்து கடுகஸ்தோட்டை அலி நாவனத்தோட்டை அண்மித்து மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களும் சில வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளமையே இந்த அபாயத்திற்கு காரணம்  என பேராசிரியர் தெரிவித்தார்.கண்டி நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் குறுகிய நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில், இந்த நகரம் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த அபாய நிலைமை தொடர்பில் பொறுப்புவாய்ந்த உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்   பேராசிரியர்   தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement