பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு இது பெரும் உதவியாக இருந்ததாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவின் அழைப்பின் பேரில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான 16 பேர் கொண்ட குழு அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்தது.
இவர்கள் கடந்த 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்திய உப ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் ஆகியோருடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான இந்தியாவின் பெருந்தன்மையை தாம் பாராட்டுவதாக அந்தக் கலந்துரையாடலில் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பும் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்தப் பயணம் வழிவகுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர்.samugammedia பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு இது பெரும் உதவியாக இருந்ததாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவின் அழைப்பின் பேரில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான 16 பேர் கொண்ட குழு அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்தது.இவர்கள் கடந்த 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்திய உப ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் ஆகியோருடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான இந்தியாவின் பெருந்தன்மையை தாம் பாராட்டுவதாக அந்தக் கலந்துரையாடலில் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.இருதரப்பும் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்தப் பயணம் வழிவகுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.