ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா இரண்டு லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையதளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையில் இவ்வாறு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் 21 பேரில் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாறான ஓர் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மொட்டு கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த தகவல் தொடர்பில் மொட்டு கட்சி அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொட்டு கட்சியின் 21 எம்.பிக்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா இரண்டு லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையதளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையில் இவ்வாறு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் 21 பேரில் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஆளும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இவ்வாறான ஓர் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மொட்டு கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த தகவல் தொடர்பில் மொட்டு கட்சி அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.