நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட குறைந்த எடையிலான பாண்களை விற்பனை செய்தல் மற்றும் பாணின் எடை, விலையை முறையாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில் 107 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 35 சம்பவங்களும், பாணின் எடையைக் காட்சிப்படுத்தாதது தொடர்பில் 85 சம்பவங்களும், விலையைக் காட்சிப்படுத்தாதது தொடர்பில் 55 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், குறித்த நடவடிக்கையின் போது 71 பேக்கரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்த எடையிலான பாண் கண்டறியப்படும் சந்தர்ப்பங்களில், அதனை விற்பனை செய்த சில்லறை வியாபாரிகள் மட்டுமன்றி, பாணை உற்பத்தி செய்த பேக்கரி வரையிலும் விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பாணின் எடையும் பரிசோதிக்கப்படுவதுடன், குற்றம் உறுதிசெய்யப்பட்டால் உற்பத்திச் செயல்முறையை உடனடியாகச் சீரமைக்க அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதுமான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையில் 118 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்ததுடன், குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 54 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.
இதற்கமைய, இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் மொத்தம் 225 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 89 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் – பாண் விற்பனையில் அதிர்ச்சி தகவல் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட குறைந்த எடையிலான பாண்களை விற்பனை செய்தல் மற்றும் பாணின் எடை, விலையை முறையாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில் 107 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.இதன்போது, குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 35 சம்பவங்களும், பாணின் எடையைக் காட்சிப்படுத்தாதது தொடர்பில் 85 சம்பவங்களும், விலையைக் காட்சிப்படுத்தாதது தொடர்பில் 55 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.மேலும், குறித்த நடவடிக்கையின் போது 71 பேக்கரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.குறைந்த எடையிலான பாண் கண்டறியப்படும் சந்தர்ப்பங்களில், அதனை விற்பனை செய்த சில்லறை வியாபாரிகள் மட்டுமன்றி, பாணை உற்பத்தி செய்த பேக்கரி வரையிலும் விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படி, பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பாணின் எடையும் பரிசோதிக்கப்படுவதுடன், குற்றம் உறுதிசெய்யப்பட்டால் உற்பத்திச் செயல்முறையை உடனடியாகச் சீரமைக்க அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், போதுமான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையில் 118 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்ததுடன், குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 54 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.இதற்கமைய, இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் மொத்தம் 225 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 89 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.