ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலளார் சட்டத்தரணி சாகர காரியவசம், கட்சியின் பொருளாளர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கும் மொட்டு கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணிலின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலளார் சட்டத்தரணி சாகர காரியவசம், கட்சியின் பொருளாளர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.