• Nov 23 2024

யாழ் மாவட்ட செயலாளரின் விசேட அறிவித்தல்...!samugammedia

Tamil nila / Jan 26th 2024, 6:57 pm
image

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் சுற்றுப்புறங்களை துப்பரவு செய்யுமாறு யாழ் மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் நாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ் மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் கடந்த  23.ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக, யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி நகர்ப்புறங்களில் உள்ள கடையுரிமையாளர்கள்,  சுகாதார பிரிவினால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் என அடையாளப்படுத்தி வர்த்தக சங்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி தயாரிக்கப்பட்டு வர்த்தக சங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட சேவை பார்க்கும் பட்டியலுக்கு அமைவாக எதிர்வரும் 27 ஆம் திகதி சமூகப்பொறுப்புடன் தங்கள் வியாபார தொழில் முயற்சிக்குரிய கட்டடம், காணி மற்றும் சுற்றுச்சூழலை நுளம்பு பெருகாதவாறு துப்பரவு செய்யுமாறும் தொடர்ந்தும் இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இச் செயல் பாட்டுக்கு ஒத்துழைக்காத , டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய நிலையில் கதைச்சூழலை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



யாழ் மாவட்ட செயலாளரின் விசேட அறிவித்தல்.samugammedia யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் சுற்றுப்புறங்களை துப்பரவு செய்யுமாறு யாழ் மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் நாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ் மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் கடந்த  23.ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக, யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி நகர்ப்புறங்களில் உள்ள கடையுரிமையாளர்கள்,  சுகாதார பிரிவினால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் என அடையாளப்படுத்தி வர்த்தக சங்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி தயாரிக்கப்பட்டு வர்த்தக சங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட சேவை பார்க்கும் பட்டியலுக்கு அமைவாக எதிர்வரும் 27 ஆம் திகதி சமூகப்பொறுப்புடன் தங்கள் வியாபார தொழில் முயற்சிக்குரிய கட்டடம், காணி மற்றும் சுற்றுச்சூழலை நுளம்பு பெருகாதவாறு துப்பரவு செய்யுமாறும் தொடர்ந்தும் இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.இச் செயல் பாட்டுக்கு ஒத்துழைக்காத , டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய நிலையில் கதைச்சூழலை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement