• Dec 09 2024

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு செலவழிக்கும் பணம் குறித்து விசேட அறிவிப்பு

Chithra / Oct 17th 2024, 3:51 pm
image

 


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள்  பிரச்சாரத்திற்கு  செலவழிக்க கூடிய அதிகபட்சம் பணம் தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2023 இலக்கம் 3 எனும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான செலவு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்குள் கட்சியின் செயலாளர், சுயேச்சைக் குழுத் தலைவர் மற்றும் வேட்பாளர் ஆகியோரின் கையொப்பம், சத்தியப் பிரமாண ஆணையாளர் அல்லது சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்ட செலவு குறித்த ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு செலவழிக்கும் பணம் குறித்து விசேட அறிவிப்பு  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள்  பிரச்சாரத்திற்கு  செலவழிக்க கூடிய அதிகபட்சம் பணம் தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.2023 இலக்கம் 3 எனும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான செலவு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்குள் கட்சியின் செயலாளர், சுயேச்சைக் குழுத் தலைவர் மற்றும் வேட்பாளர் ஆகியோரின் கையொப்பம், சத்தியப் பிரமாண ஆணையாளர் அல்லது சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்ட செலவு குறித்த ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement