• Oct 18 2024

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு விசேட பொலிஸ் குழுக்கள்! samugammedia

Tamil nila / Mar 30th 2023, 8:57 pm
image

Advertisement

கண்டி மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை அமுல்படுத்த கண்டி பொலிஸார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


விசேட பொலிஸ் குழுக்கள் பல, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டி மாநகரம் மற்றும் நகரப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுமென மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த தஸாநாயக்க தெரிவித்தார்.


கடந்த சில வாரங்களாக கண்டிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த பல்வேறு அசம்பாவிதங்கள் குறித்து அவதானம் செலுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கமைவாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்திய குடிபோதையில் இருந்த வழிகாட்டிகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.


சுற்றுலா வழிகாட்டிகளால் அதிகளவில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய மாகாண ஆளுநர், வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.



எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக சோதனை பணிகளை மேற்கொள்வது போன்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமெனவும், சம்பந்தப்பட்ட வழிகாட்டிகளை ஒன்றிணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மஹிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.


சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு விசேட பொலிஸ் குழுக்கள் samugammedia கண்டி மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை அமுல்படுத்த கண்டி பொலிஸார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.விசேட பொலிஸ் குழுக்கள் பல, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டி மாநகரம் மற்றும் நகரப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுமென மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த தஸாநாயக்க தெரிவித்தார்.கடந்த சில வாரங்களாக கண்டிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த பல்வேறு அசம்பாவிதங்கள் குறித்து அவதானம் செலுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கமைவாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்திய குடிபோதையில் இருந்த வழிகாட்டிகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.சுற்றுலா வழிகாட்டிகளால் அதிகளவில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய மாகாண ஆளுநர், வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக சோதனை பணிகளை மேற்கொள்வது போன்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமெனவும், சம்பந்தப்பட்ட வழிகாட்டிகளை ஒன்றிணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மஹிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement