• Oct 31 2024

தீபாவவளி தினத்தில் மூதூரில் விசேட பூஜை வழிபாடுகள்..!

Sharmi / Oct 31st 2024, 8:50 am
image

Advertisement

மூதூர் மல்லிகைத்தீவு திருமங்களேஸ்வரர் ஆலயத்தில் தீபாவவளி பூஜை வழிபாடுகள் இன்று(31) காலை இடம்பெற்றது.

பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குருக்கள் சிறி ரூப சர்மா நிகழ்த்தினார்.

தீபாவளி பூஜை வழிபாட்டில் அதிகளவான பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு 

அதேவேளை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்  பொலிஸார் இணைந்து தீபாவளி தினமான இன்று ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் பொதுமக்களுக்கும் நாட்டுக்குமாக வேண்டி விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வழிபாட்டில் பொதுமக்களும், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் என பலரும் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆலய வளாகத்தில் வைத்து மரக்கன்றுகளும் பொலிஸாரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.



தீபாவவளி தினத்தில் மூதூரில் விசேட பூஜை வழிபாடுகள். மூதூர் மல்லிகைத்தீவு திருமங்களேஸ்வரர் ஆலயத்தில் தீபாவவளி பூஜை வழிபாடுகள் இன்று(31) காலை இடம்பெற்றது.பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குருக்கள் சிறி ரூப சர்மா நிகழ்த்தினார்.தீபாவளி பூஜை வழிபாட்டில் அதிகளவான பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.முல்லைத்தீவு அதேவேளை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்  பொலிஸார் இணைந்து தீபாவளி தினமான இன்று ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் பொதுமக்களுக்கும் நாட்டுக்குமாக வேண்டி விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த வழிபாட்டில் பொதுமக்களும், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் என பலரும் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆலய வளாகத்தில் வைத்து மரக்கன்றுகளும் பொலிஸாரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement