• Sep 19 2024

ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட ஆராய்வு!

Tamil nila / Feb 9th 2023, 3:54 pm
image

Advertisement

எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் இந்திய அரசினால் இலங்கை அரசிற்கு கையளிக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ள நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் களவிஜயம் இன்று இடம்பெற்றது.


இம் முன் ஏற்பாடுகள் தொடர்பான கள விஜயத்தில் யாழ். மாநகர முதல்வர் கௌரவ முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் இணைந்திருந்தார்.


ஜனாதிபதி வருகை உள்ளிட்ட அரங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் இறுதிசெய்யப்பட்டது.


இக் கள ஆராய்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஹரி பந்துலசேன, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ச.சிவபாலசுந்தரன்,வடக்குமாகாண திணைக்கள உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், மாநகர ஆணையாளர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட ஆராய்வு எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் இந்திய அரசினால் இலங்கை அரசிற்கு கையளிக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ள நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் களவிஜயம் இன்று இடம்பெற்றது.இம் முன் ஏற்பாடுகள் தொடர்பான கள விஜயத்தில் யாழ். மாநகர முதல்வர் கௌரவ முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் இணைந்திருந்தார்.ஜனாதிபதி வருகை உள்ளிட்ட அரங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் இறுதிசெய்யப்பட்டது.இக் கள ஆராய்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஹரி பந்துலசேன, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ச.சிவபாலசுந்தரன்,வடக்குமாகாண திணைக்கள உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், மாநகர ஆணையாளர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement