இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600 போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பார்வையாளர்கள் விளையாட்டரங்கிற்குள் பெரிய அளவிலான பயணப் பொதிகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை எடுத்து வருவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிரிக்கெட் தொடர் நாளை (7) ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி (SSC) மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், செபஸ்டியன் கால்வாய் வீதிக்கு அருகிலுள்ள மல்வத்தை பாலம் மற்றும் 100 அடி வீதி - விகாரை வீதிச் சந்தி ஆகியவற்றின் ஊடாக மைதானம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படவுள்ளது.
மேலும், மைதானத்திற்கு அருகிலுள்ள மாளிகாவத்தை வீதி பக்கவாட்டு வீதி மற்றும் சத்தர்ம மாவத்தை - கெத்தாராம வீதிச் சந்தி ஊடாக விகாரை வீதிக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
அதேவேளை, எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் செல்லும் நுழைவு பகுதி, வித்யா மாவத்தை சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் செல்லும் நுழைவு பகுதி மற்றும் விஜேராம சந்தியிலிருந்து வித்யா மாவத்தைக்கு நுழையும் பகுதி ஆகிய இடங்களில் போக்குவரத்துத் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது.
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் - 2,100 பொலிஸார் களத்தில் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600 போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, பார்வையாளர்கள் விளையாட்டரங்கிற்குள் பெரிய அளவிலான பயணப் பொதிகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை எடுத்து வருவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கிரிக்கெட் தொடர் நாளை (7) ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி (SSC) மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதேநேரம், செபஸ்டியன் கால்வாய் வீதிக்கு அருகிலுள்ள மல்வத்தை பாலம் மற்றும் 100 அடி வீதி - விகாரை வீதிச் சந்தி ஆகியவற்றின் ஊடாக மைதானம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படவுள்ளது.மேலும், மைதானத்திற்கு அருகிலுள்ள மாளிகாவத்தை வீதி பக்கவாட்டு வீதி மற்றும் சத்தர்ம மாவத்தை - கெத்தாராம வீதிச் சந்தி ஊடாக விகாரை வீதிக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.அதேவேளை, எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் செல்லும் நுழைவு பகுதி, வித்யா மாவத்தை சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் செல்லும் நுழைவு பகுதி மற்றும் விஜேராம சந்தியிலிருந்து வித்யா மாவத்தைக்கு நுழையும் பகுதி ஆகிய இடங்களில் போக்குவரத்துத் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது.