• Nov 19 2024

நீண்ட வார விடுமுறை - விசேட ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு..!

Chithra / Nov 17th 2024, 7:53 am
image

 

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு வரும் பயணிகளுக்காக சில சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 7 சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இயங்குகின்றன.

அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஹிக்கடுவை வரையிலும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். 

குறித்த விசேட பேருந்து சேவைகள் நாளை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டார். 

பொதுத் தேர்தலுக்காக அதிகளவான மக்கள் சென்ற பகுதிகளுக்குக் கொழும்பிலிருந்து மேலதிகமாக பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

விசேடமாக ஹட்டன், கண்டி, பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, காலி ஆகிய மாத்தறை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நீண்ட வார விடுமுறை - விசேட ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு.  பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு வரும் பயணிகளுக்காக சில சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்றும் நாளையும் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, 7 சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இயங்குகின்றன.அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஹிக்கடுவை வரையிலும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விசேட பேருந்து சேவைகள் நாளை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டார். பொதுத் தேர்தலுக்காக அதிகளவான மக்கள் சென்ற பகுதிகளுக்குக் கொழும்பிலிருந்து மேலதிகமாக பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசேடமாக ஹட்டன், கண்டி, பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, காலி ஆகிய மாத்தறை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement