• Dec 24 2024

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து திட்டம்!

Chithra / Dec 23rd 2024, 2:37 pm
image

 

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது

இதன்படி நாளை முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் கொழும்புக்கு வருவதற்காக பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பண்டிகை காலத்தையொட்டி, சில சிறப்பு ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளது

கடந்த 27ஆம் திகதி இரவு பதுளைக்கு விசேட புகையிரதமும் கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்  என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.

அத்துடன், டிசம்பர் 28ஆம் திகதி காலை பதுளைக்கு விசேட புகையிரதமும், 29ஆம் திகதி இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மேலதிகமாக யாழ். தேவி விரைவு ரயிலுடன் யாழ்ப்பாணம் வரை நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலையும் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து திட்டம்  பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதுஇதன்படி நாளை முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் கொழும்புக்கு வருவதற்காக பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், பண்டிகை காலத்தையொட்டி, சில சிறப்பு ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளதுகடந்த 27ஆம் திகதி இரவு பதுளைக்கு விசேட புகையிரதமும் கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்  என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.அத்துடன், டிசம்பர் 28ஆம் திகதி காலை பதுளைக்கு விசேட புகையிரதமும், 29ஆம் திகதி இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இதற்கு மேலதிகமாக யாழ். தேவி விரைவு ரயிலுடன் யாழ்ப்பாணம் வரை நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலையும் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement