• Mar 10 2026

கந்தளாயில் விசேட வாகன பரிசோதனை

Chithra / Mar 10th 2026, 10:49 am
image


கந்தளாய் பகுதியில் நேற்று மாலை வாகனங்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மை குறித்த விசேட திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

திருகோணமலை பிரதான வாகனப் பரிசோதனை தலைமையகத்திலிருந்து வருகை தந்த அதிகாரி எம்.எஸ் .பி .ஆர் ,கருணாதிலக  மற்றும் கந்தளாய் பொலிஸார் இணைந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீதிகளில் பயணித்த அனைத்து வகையான வாகனங்களும் இதன்போது தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.

குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பரிசோதனையின் போது பின்வரும் விடயங்கள் குறித்து அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தினர்.

வாகனங்களின் பிரதான விளக்குகள் மற்றும் அவற்றின் ஒளித்தன்மை முறையாக உள்ளனவா என்பது ஆராயப்பட்டது.

 விபத்துக்களைத் தவிர்க்க மிக அவசியமான சிக்னல் விளக்குகளின் செயற்பாடுகள் சரிபார்க்கப்பட்டன.

பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தப் பரிசோதனையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், அந்தப் பிழைகளைச் சீர்செய்வதற்காக 14 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாயில் விசேட வாகன பரிசோதனை கந்தளாய் பகுதியில் நேற்று மாலை வாகனங்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மை குறித்த விசேட திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.திருகோணமலை பிரதான வாகனப் பரிசோதனை தலைமையகத்திலிருந்து வருகை தந்த அதிகாரி எம்.எஸ் .பி .ஆர் ,கருணாதிலக  மற்றும் கந்தளாய் பொலிஸார் இணைந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீதிகளில் பயணித்த அனைத்து வகையான வாகனங்களும் இதன்போது தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பரிசோதனையின் போது பின்வரும் விடயங்கள் குறித்து அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தினர்.வாகனங்களின் பிரதான விளக்குகள் மற்றும் அவற்றின் ஒளித்தன்மை முறையாக உள்ளனவா என்பது ஆராயப்பட்டது. விபத்துக்களைத் தவிர்க்க மிக அவசியமான சிக்னல் விளக்குகளின் செயற்பாடுகள் சரிபார்க்கப்பட்டன.பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.இந்தப் பரிசோதனையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், அந்தப் பிழைகளைச் சீர்செய்வதற்காக 14 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement