• Nov 27 2024

உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் - ஆன்மிக அறக்கட்டளை பரிசளிப்பு விழா!

Tharmini / Nov 11th 2024, 12:22 pm
image

உலக, சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி, ஆன்மிக அறக்கட்டளை நடத்திய பரிசளிப்பு விழாவானது நேற்று(10) வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வானது மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது உரை மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து சித்தங்கேணியில் உள்ள பாடசாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திருச்சிற்றம்பலம் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் தேசிய கல்வித் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி  பாலசுப்பிரமணியம் தனபாலன் அவர்கள் பிரதம அதிதியாகவும், வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், இதில் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் - ஆன்மிக அறக்கட்டளை பரிசளிப்பு விழா உலக, சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி, ஆன்மிக அறக்கட்டளை நடத்திய பரிசளிப்பு விழாவானது நேற்று(10) வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வானது மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது உரை மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சித்தங்கேணியில் உள்ள பாடசாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திருச்சிற்றம்பலம் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் தேசிய கல்வித் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி  பாலசுப்பிரமணியம் தனபாலன் அவர்கள் பிரதம அதிதியாகவும், வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், இதில் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement