தமிழரசு கட்சியின் தலைமை வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோவின் நிதிச் செயலாளருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியின் தலைவர் யார் என்பது அவர்களுடைய கட்சி தீர்மானித்துக் கொள்ளட்டும்.
ஆனால் இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்பில் நான் அதிகம் கூற வேண்டிய தேவையில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவிப்பின் போது மூன்று பிரதேச சபைகளில் சக காட்சிகளுக்கு ஆசனம் வழங்க மறுத்து விட்டார்.
தான்தான் கிளிநொச்சி நாட்டாமை என நினைத்து தனது ஆதரவாளர்களையே வேட்பாளராக்க வேண்டும்,
சக தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என நினைப்பவர் எவ்வாறு ஒற்றுமையை விரும்புவார்.
தமிழரசு கட்சியின் உடைய தற்போதைய தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜா உண்மையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.
ஆகவே சக தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக,
தமிழ் மக்களின் குரலாக ஒளிப்பவர்கள் தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒற்றுமையை விரும்பாத சிறிதரன் மற்றும் சுமந்திரன். தலைமை பொறுப்புக்கு தகுதியற்றவர்கள். தமிழரசு கட்சியின் தலைமை வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோவின் நிதிச் செயலாளருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார்.யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியின் தலைவர் யார் என்பது அவர்களுடைய கட்சி தீர்மானித்துக் கொள்ளட்டும்.ஆனால் இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்பில் நான் அதிகம் கூற வேண்டிய தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவிப்பின் போது மூன்று பிரதேச சபைகளில் சக காட்சிகளுக்கு ஆசனம் வழங்க மறுத்து விட்டார்.தான்தான் கிளிநொச்சி நாட்டாமை என நினைத்து தனது ஆதரவாளர்களையே வேட்பாளராக்க வேண்டும்,சக தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என நினைப்பவர் எவ்வாறு ஒற்றுமையை விரும்புவார்.தமிழரசு கட்சியின் உடைய தற்போதைய தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜா உண்மையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.ஆகவே சக தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக, தமிழ் மக்களின் குரலாக ஒளிப்பவர்கள் தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.