புத்தரின் தந்த தாது காட்சிப்படுத்தப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற யாத்திரிகர்களின் பொதிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை இன்னும் திருப்பி எடுத்துச் செல்லப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைப்பதற்காக சிவில் பாதுகாப்புத் துறையானது திட்ட முறையொன்றை கொண்டுவரவுள்ளதாக மத்திய மாகாண சபையின் பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாத்திரிகர்களின் பொதிகளை உரிய முறையில் சேகரித்து, பின்னர், அவற்றை பாதுகாப்பாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை சிவில் பாதுகாப்புத் துறை அதன் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தி வருகிறது.
எனினும், சில பொதிகள் மற்றும் ஏனைய உடைமைகள் இதுவரை எவராலும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டு காணப்படுகின்றன.
இவ்வாறு திருப்பி எடுக்கப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைக்க ஒரு முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும் (28) நாளையும் (29) கண்டி ஏரியில் உள்ள ஜோய் படகுச் சேவைத்தளத்துக்கு முன்னால் கைவிடப்பட்ட பொதிகளை உரியவர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தத்தமது பொதிகளை பெறாதவர்கள் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையுடன் இந்த இடத்துக்குச் சென்று தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்ளுமாறு சிவில் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்ரீ தலதா வழிபாடு; கைவிடப்பட்ட யாத்திரிகர்களின் பொதிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு புத்தரின் தந்த தாது காட்சிப்படுத்தப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற யாத்திரிகர்களின் பொதிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.அதேவேளை இன்னும் திருப்பி எடுத்துச் செல்லப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைப்பதற்காக சிவில் பாதுகாப்புத் துறையானது திட்ட முறையொன்றை கொண்டுவரவுள்ளதாக மத்திய மாகாண சபையின் பிரதான செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யாத்திரிகர்களின் பொதிகளை உரிய முறையில் சேகரித்து, பின்னர், அவற்றை பாதுகாப்பாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை சிவில் பாதுகாப்புத் துறை அதன் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தி வருகிறது. எனினும், சில பொதிகள் மற்றும் ஏனைய உடைமைகள் இதுவரை எவராலும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டு காணப்படுகின்றன. இவ்வாறு திருப்பி எடுக்கப்படாத பொதிகளை உரிய யாத்திரிகர்களிடம் ஒப்படைக்க ஒரு முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் (28) நாளையும் (29) கண்டி ஏரியில் உள்ள ஜோய் படகுச் சேவைத்தளத்துக்கு முன்னால் கைவிடப்பட்ட பொதிகளை உரியவர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தத்தமது பொதிகளை பெறாதவர்கள் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையுடன் இந்த இடத்துக்குச் சென்று தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்ளுமாறு சிவில் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.