• Mar 26 2025

இலங்கை இராணுவ தளபதியால் கொடிகாமத்தில் வீடு கையளிப்பு

Chithra / Mar 25th 2025, 3:39 pm
image


யாழ் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட  வீடு  குடும்பத்தினரிடம் இன்று (25) இலங்கை இராணுவ தளபதியால் கையளிக்கப்பட்டது.

இமேஜின் கம்பெஷன் இன்ரநெஸ்னல் லிமிட்டட் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் 52வது இராணுவ காலாட்படை தலமை செயலகத்தின் கீழ் அமைந்துள்ள 523வது காலாட்படை பிரிவின் வழிகாட்டுதலில் 7வது விஜயபாகு படைப்பிரிவின் முழுமையான சிரமதான பணிமூலம் புதிதாக அமைக்கப்பட்ட வீடு துரைசிங்கம் ரஜின்தாஸ் குடும்பத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டது

இலங்கை இராணுவத் தளபதி லுதிதன் ஜெனரல் BKGML ரொத்ரிகோ RSP,CTF,NDU,PSC,IG புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீட்டை  நாடா வெட்டி திறந்துவைத்து குடும்பஸ்தரிடம் கையளித்தார் 

இலங்கை இராணுவத் தளபதியால் வீட்டிற்கு தேவையான சில தளபாடங்களும் குடும்பஸ்தரிடம் கையளிக்கப்பட்டது 

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ தளபதி, யாழ் பாதுகாப்பு படை கட்டளை தளபதி, 52வது காலாட்படையின் சேனாதிபதி, 523வது காலாட்படைப்பிரிவின் படைத் தளபதி, 7வது விஜயபாகு படைப்பிரிவின் படைத் தளபதி, இமேஜின் கம்பெஷன் இன்ரர்நெஷ்னல் லிமிட்டட் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் உறுப்பினர்கள்,கிராம சேவையாளர், அருட்தந்தை, அரச உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள்,இ ராணுவ வீரர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுவ தளபதியால் கொடிகாமத்தில் வீடு கையளிப்பு யாழ் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட  வீடு  குடும்பத்தினரிடம் இன்று (25) இலங்கை இராணுவ தளபதியால் கையளிக்கப்பட்டது.இமேஜின் கம்பெஷன் இன்ரநெஸ்னல் லிமிட்டட் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் 52வது இராணுவ காலாட்படை தலமை செயலகத்தின் கீழ் அமைந்துள்ள 523வது காலாட்படை பிரிவின் வழிகாட்டுதலில் 7வது விஜயபாகு படைப்பிரிவின் முழுமையான சிரமதான பணிமூலம் புதிதாக அமைக்கப்பட்ட வீடு துரைசிங்கம் ரஜின்தாஸ் குடும்பத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டதுஇலங்கை இராணுவத் தளபதி லுதிதன் ஜெனரல் BKGML ரொத்ரிகோ RSP,CTF,NDU,PSC,IG புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீட்டை  நாடா வெட்டி திறந்துவைத்து குடும்பஸ்தரிடம் கையளித்தார் இலங்கை இராணுவத் தளபதியால் வீட்டிற்கு தேவையான சில தளபாடங்களும் குடும்பஸ்தரிடம் கையளிக்கப்பட்டது இந்நிகழ்வில் இலங்கை இராணுவ தளபதி, யாழ் பாதுகாப்பு படை கட்டளை தளபதி, 52வது காலாட்படையின் சேனாதிபதி, 523வது காலாட்படைப்பிரிவின் படைத் தளபதி, 7வது விஜயபாகு படைப்பிரிவின் படைத் தளபதி, இமேஜின் கம்பெஷன் இன்ரர்நெஷ்னல் லிமிட்டட் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் உறுப்பினர்கள்,கிராம சேவையாளர், அருட்தந்தை, அரச உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள்,இ ராணுவ வீரர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement