கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் 75 மீற்றருக்கு மேற்பட்ட வீதியினை உழவியந்திரத்தினால் நேற்றையதினம் உழுதிருந்தார்.
இதனால் கிராம மக்களிற்கும் , குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து கிராம மக்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் மற்றும் பிரதேச சபைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர் கிருஷாந்தன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று வீதியினை பார்வையிட்டிருந்ததோடு குறித்த கிராம மக்களிடம் இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதத்தினை பிரதேச சபைக்கு தருமாறும் அதற்குரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் குறித்த வீதியை சீர் செய்து தருவதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் கூறியிருந்தார்.
புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவர் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் 75 மீற்றருக்கு மேற்பட்ட வீதியினை உழவியந்திரத்தினால் நேற்றையதினம் உழுதிருந்தார். இதனால் கிராம மக்களிற்கும் , குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து கிராம மக்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் மற்றும் பிரதேச சபைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.அதனையடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர் கிருஷாந்தன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று வீதியினை பார்வையிட்டிருந்ததோடு குறித்த கிராம மக்களிடம் இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதத்தினை பிரதேச சபைக்கு தருமாறும் அதற்குரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் குறித்த வீதியை சீர் செய்து தருவதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் கூறியிருந்தார்.