• Mar 14 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!

shanu / Mar 14th 2026, 7:32 am
image




நாட்டின் கடுமையான வெப்பசூழல் பதிவாகி வரும் நிலையில் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவிய


சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும். 


மழையால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


நாட்டில் கடந்த சில நாள்களாக வெப்பம் கோர தாண்டவமாடியதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில் மழை கிடைத்தால் வெப்பத்திலிருந்து சற்று தணியலாம் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 


நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு நாட்டின் கடுமையான வெப்பசூழல் பதிவாகி வரும் நிலையில் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும். மழையால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில நாள்களாக வெப்பம் கோர தாண்டவமாடியதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில் மழை கிடைத்தால் வெப்பத்திலிருந்து சற்று தணியலாம் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement