• Mar 14 2026

ஈரான் மாலுமிகளின் சடலங்களுடன் புறப்பட்ட விசேட விமானம்!

shanu / Mar 14th 2026, 7:36 am
image

ஈரானின்  கடற்படை கப்பல் மூழ்கடித்ததில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் ஒன்று ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது. 


ஈரானிய  ஏர்பஸ் 340 ரக  என்ற விசேட விமானம் நேற்று இரவு 9.29 மணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. 


மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 


கொச்சினில்  தங்கவைக்கப்பட்டிருந்த மற்றொரு ஈரான் கடற்படை கப்பலான IRIS Lavan இன் இருந்த 183 ஈரான் மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு குறித்த விமானம் செல்லவுள்ளது.


இதேவேளை  குளிரூட்டியில் வைக்கப்பட்ட 84 பேரது உடல்களையும் ஒரேதடவையாக கொண்டு செல்ல முடியாததால்,  45 உடல்கள் முதல்கட்டமாக கொண்டு செல்லப்படுகிறது.


கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி சர்வதேசக் கடலில்  நின்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் 84 மாலுமிகள்  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மாலுமிகளின் சடலங்களுடன் புறப்பட்ட விசேட விமானம் ஈரானின்  கடற்படை கப்பல் மூழ்கடித்ததில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் ஒன்று ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது. ஈரானிய  ஏர்பஸ் 340 ரக  என்ற விசேட விமானம் நேற்று இரவு 9.29 மணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. கொச்சினில்  தங்கவைக்கப்பட்டிருந்த மற்றொரு ஈரான் கடற்படை கப்பலான IRIS Lavan இன் இருந்த 183 ஈரான் மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு குறித்த விமானம் செல்லவுள்ளது.இதேவேளை  குளிரூட்டியில் வைக்கப்பட்ட 84 பேரது உடல்களையும் ஒரேதடவையாக கொண்டு செல்ல முடியாததால்,  45 உடல்கள் முதல்கட்டமாக கொண்டு செல்லப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி சர்வதேசக் கடலில்  நின்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானின் 84 மாலுமிகள்  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement