• Mar 14 2026

சட்டவிரோத ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

shanu / Mar 14th 2026, 11:26 am
image

கொழும்பு, கடுவெல - வெலிவிட்ட பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் நபர் ஒருவரைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் பிடிபட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரைபிள் துப்பாக்கி, 15 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 2 ரைபிள் தோட்டாக்கள், ஒரு மகசின், 50 நேரடித் தோட்டாக்கள் (7.62 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்தவை) என்பவையே கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்பு, கடுவெல - வெலிவிட்ட பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் நபர் ஒருவரைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் பிடிபட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரைபிள் துப்பாக்கி, 15 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 2 ரைபிள் தோட்டாக்கள், ஒரு மகசின், 50 நேரடித் தோட்டாக்கள் (7.62 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்தவை) என்பவையே கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement