ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் 'பெட்ரோலிய உயிர்நாடி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்தத் தீவின் மூலமே முன்னெடுக்கின்றது.
அத்துடன், ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது.
எனவே, கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சு - பதிலடி வழங்க தயாராகும் ஈரான் ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் 'பெட்ரோலிய உயிர்நாடி' என்றும் அழைக்கப்படுகிறது. ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்தத் தீவின் மூலமே முன்னெடுக்கின்றது. அத்துடன், ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது. எனவே, கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.