இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
தம்புள்ளை மற்றும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள டிக்கெட் கரும பீடங்களை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியை காண 18,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி நாளை (19) நடைபெறவுள்ளதுடன் மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி 21ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் விசேட அறிவித்தல். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம், பொது மக்களிடம் கோரியுள்ளது.தம்புள்ளை மற்றும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள டிக்கெட் கரும பீடங்களை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியை காண 18,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி நாளை (19) நடைபெறவுள்ளதுடன் மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி 21ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.