“இலங்கை நிகழ்வு நாட்காட்டி” என்ற புதிய தேசிய டிஜிட்டல் தளம் வியாழக்கிழமை (23) அன்று தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட ஆதாரத்தை வழங்கும் வகையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
srilankaevents.lk எனும் அதிகாரப்பூர்வ இணையதளம், கலாச்சார, விளையாட்டு மற்றும் வணிக நிகழ்வுகள் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் இருவருக்கும் ஒரே அணுகல் புள்ளியாக அமைகிறது.
இந்த முன்னெடுப்பின் நோக்கம், இலங்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளிநாட்டுப் பயணிகளுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலம் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதும், அதேவேளையில் உள்ளூர் அமைப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் கலைஞர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதாகுதம்.
இந்தத் தளம், நிகழ்வுத் துறைக்குள் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, இலங்கையைத் தெற்காசியாவின் முன்னணி நிகழ்வு மையமாக நிலைநிறுத்தும் என்றும், தொழில்நுட்பத்தை உள்ளூர் திறமையாளர்களுடன் இணைப்பதன் மூலம் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
'இலங்கை நிகழ்வு நாட்காட்டி' இணையதளம் ஆரம்பம் “இலங்கை நிகழ்வு நாட்காட்டி” என்ற புதிய தேசிய டிஜிட்டல் தளம் வியாழக்கிழமை (23) அன்று தொடங்கப்பட்டது.நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட ஆதாரத்தை வழங்கும் வகையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.srilankaevents.lk எனும் அதிகாரப்பூர்வ இணையதளம், கலாச்சார, விளையாட்டு மற்றும் வணிக நிகழ்வுகள் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் இருவருக்கும் ஒரே அணுகல் புள்ளியாக அமைகிறது.இந்த முன்னெடுப்பின் நோக்கம், இலங்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளிநாட்டுப் பயணிகளுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலம் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதும், அதேவேளையில் உள்ளூர் அமைப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் கலைஞர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதாகுதம்.இந்தத் தளம், நிகழ்வுத் துறைக்குள் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, இலங்கையைத் தெற்காசியாவின் முன்னணி நிகழ்வு மையமாக நிலைநிறுத்தும் என்றும், தொழில்நுட்பத்தை உள்ளூர் திறமையாளர்களுடன் இணைப்பதன் மூலம் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.