கண்டி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் பாவனையானது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற "நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம்" எனும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய மாநாட்டில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.
பொலிஸ் சுற்றிவளைப்பு அறிக்கைகளின்படி, போதைப்பொருள் புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது.
2025 இல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அளவு சுமார் 1 கிலோ 200 கிராமினால் அதிகரித்துள்ளது.
இதன் பயன்பாடு 5 மடங்கு அதிகரித்து, சுமார் 3 கிலோ 23 கிராம் வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டியில் சமீபத்தில் மூன்று பயணிகள் பேருந்துகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, மூன்று சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ள பெண்களும், பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை தற்போது சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக லலித் பத்திநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்த வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நுவர அக்கா, மாத்தளை அக்கா மற்றும் குடு சைமா போன்ற நபர்களைப் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையப்புள்ளியாக மாறிய இலங்கை - முக்கிய நபர்கள் அடையாளம் கண்டி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் பாவனையானது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற "நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம்" எனும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய மாநாட்டில் அவர் இதனை வெளிப்படுத்தினார். பொலிஸ் சுற்றிவளைப்பு அறிக்கைகளின்படி, போதைப்பொருள் புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது. 2025 இல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அளவு சுமார் 1 கிலோ 200 கிராமினால் அதிகரித்துள்ளது. இதன் பயன்பாடு 5 மடங்கு அதிகரித்து, சுமார் 3 கிலோ 23 கிராம் வரை கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டியில் சமீபத்தில் மூன்று பயணிகள் பேருந்துகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, மூன்று சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ள பெண்களும், பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கை தற்போது சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக லலித் பத்திநாயக்க தெரிவித்தார். கண்டியில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்த வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நுவர அக்கா, மாத்தளை அக்கா மற்றும் குடு சைமா போன்ற நபர்களைப் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.