• May 23 2026

"இலங்கை ஆசீர்வதிக்கப்பட்ட நாடு" - சஜித்திடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா தெரிவிப்பு

Chithra / Nov 4th 2025, 7:43 pm
image


இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புதுடில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழில் துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று இந்திய நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

வலுவான உள்நாட்டு தொழில் துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளைப்  பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர்.

கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா - இலங்கை தொழில் நுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது முன்வைத்தார்.


நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

"இந்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், இலங்கையைப் பற்றி மிகுந்த அன்புடன் பேசியதுடன், இலங்கையை "ஒவ்வொரு வளத்தாலும், மனித ஆற்றலாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு" என்று வர்ணித்தார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் உயர்நிலையில் உள்ள வளங்களையும், மனித ஆற்றலையும் நாடு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் உண்மையான திறனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது. இலங்கைக்கு நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக எனது நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்றுள்ளது.

"இலங்கை ஆசீர்வதிக்கப்பட்ட நாடு" - சஜித்திடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா தெரிவிப்பு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புதுடில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழில் துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று இந்திய நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.வலுவான உள்நாட்டு தொழில் துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கையில் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.அத்துடன், ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தொழில் துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளைப்  பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர்.கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா - இலங்கை தொழில் நுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது முன்வைத்தார்.நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்தார்.இந்தச் சந்திப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-"இந்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், இலங்கையைப் பற்றி மிகுந்த அன்புடன் பேசியதுடன், இலங்கையை "ஒவ்வொரு வளத்தாலும், மனித ஆற்றலாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு" என்று வர்ணித்தார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் உயர்நிலையில் உள்ள வளங்களையும், மனித ஆற்றலையும் நாடு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் உண்மையான திறனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது. இலங்கைக்கு நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக எனது நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement