• Jan 30 2025

இரத்த புற்றுநோய் தொடர்பான 9 விசேட வைத்திய நிபுணர்களை இழந்த இலங்கை

Chithra / Jan 30th 2025, 11:12 am
image

 

நாட்டில் தற்போது இரத்த புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் 4 பேர் மாத்திரமே உள்ளனர்.

இத்துறை சார்ந்த உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள வைத்தியர் மீள நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதுடன் இவ்வாறு 9 விசேட வைத்திய நிபுணர்களை இந்நாடு இழந்துள்ளதாக தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் இரத்த புற்றுநோய் மற்றும் இரத்த அணுக்கள் மாற்று விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்தார்.

அத்தோடு சமூகத்தில் உள்ள 5 பேரில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதுடன் 12 பெண்களில் ஒருவரும், 9 ஆண்களில் ஒருவரும் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடலாம் எனஅண்மைய ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

2050 ஆண்டாகும் போது சுமார் 35 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. 

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொற்றாநோய்களின் பட்டியலில் புற்றுநோய் இரண்டாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் 50 வயதுக்கும் குறைந்த புதிய புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, அவ்வயதினரிடையே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 27 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 10 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். 

மாறிவரும் வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்கவழக்கங்கள், மது பாவனை, புகைத்தல் போன்ற காரணங்களால் பலர் புற்றுநோய்க்கு ஆளாகுகின்றனர்.

நாட்டில் தற்போது புற்றுநோயாளர்களுக்கு அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சைகள் மற்றும் அறுவைசிக்சைகள் என்பன உயர்தரமான முறையில் வழங்கப்படுகிறது. 

புற்று நோயாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுத் தருவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். 

எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். என்றார்.

இரத்த புற்றுநோய் தொடர்பான 9 விசேட வைத்திய நிபுணர்களை இழந்த இலங்கை  நாட்டில் தற்போது இரத்த புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் 4 பேர் மாத்திரமே உள்ளனர்.இத்துறை சார்ந்த உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள வைத்தியர் மீள நாடு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதுடன் இவ்வாறு 9 விசேட வைத்திய நிபுணர்களை இந்நாடு இழந்துள்ளதாக தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் இரத்த புற்றுநோய் மற்றும் இரத்த அணுக்கள் மாற்று விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்தார்.அத்தோடு சமூகத்தில் உள்ள 5 பேரில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதுடன் 12 பெண்களில் ஒருவரும், 9 ஆண்களில் ஒருவரும் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடலாம் எனஅண்மைய ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.2021 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2050 ஆண்டாகும் போது சுமார் 35 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொற்றாநோய்களின் பட்டியலில் புற்றுநோய் இரண்டாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 50 வயதுக்கும் குறைந்த புதிய புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, அவ்வயதினரிடையே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 27 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 10 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். மாறிவரும் வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்கவழக்கங்கள், மது பாவனை, புகைத்தல் போன்ற காரணங்களால் பலர் புற்றுநோய்க்கு ஆளாகுகின்றனர்.நாட்டில் தற்போது புற்றுநோயாளர்களுக்கு அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சைகள் மற்றும் அறுவைசிக்சைகள் என்பன உயர்தரமான முறையில் வழங்கப்படுகிறது. புற்று நோயாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுத் தருவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement