• Apr 22 2025

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Chithra / Mar 7th 2025, 2:55 pm
image

 

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில்  உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுவதற்காக இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அந்தவகையில், திருகோணமலை மாநகர சபை, கிண்ணியா நகர சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, மொறவெவ பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில்  உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுவதற்காக இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.அந்தவகையில், திருகோணமலை மாநகர சபை, கிண்ணியா நகர சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, மொறவெவ பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement