• Dec 14 2024

இலங்கை கடற்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்!

Anaath / Aug 27th 2024, 11:53 am
image

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் பானகொட அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் பானகொட அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement