• Nov 28 2024

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம்! எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்

Chithra / Mar 27th 2024, 8:38 am
image



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று புதன்கிழமை கூடவுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையானது கட்சியின் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு கூடவுள்ளது.

இது வழமையான கூட்டமாகும் என்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை  நாட்டில் அரசியல் நிலைமை நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டுமாயின் பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பணிகள் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. 

நிறைவேற்று சபை கூட்டத்தில் மே தினம், புதிய அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

மே தின கூட்டத்தை இம்முறை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். என்றார்.

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று புதன்கிழமை கூடவுள்ளது.அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையானது கட்சியின் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு கூடவுள்ளது.இது வழமையான கூட்டமாகும் என்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை  நாட்டில் அரசியல் நிலைமை நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டுமாயின் பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பணிகள் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. நிறைவேற்று சபை கூட்டத்தில் மே தினம், புதிய அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.மே தின கூட்டத்தை இம்முறை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement