• May 03 2024

தென்னிலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்...!

Sharmi / Mar 27th 2024, 8:38 am
image

Advertisement

ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடவத்தை பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது நேற்றையதினம்(26) கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதோடு ,வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றே வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த வெடிகுண்டு தாக்குதலானது அரசியல் பழிவாங்கல் காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கட்சி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கைக்குண்டு ஒன்றும், கட்சி அலுவலகத்திற்குள் கைக்குண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலும், குண்டு வெடிக்காததால், நடக்கவிருந்த அழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்சி அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் தற்போது தேர்தலுக்கு முகங்கொடுக்க பிரதான கட்சிகள் தயாராகிவரும் நிலையில் கட்சி அலுவலகமொன்றின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல். ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடவத்தை பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது நேற்றையதினம்(26) கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.குறித்த தாக்குதலினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதோடு ,வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றே வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.குறித்த வெடிகுண்டு தாக்குதலானது அரசியல் பழிவாங்கல் காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அதேவேளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கட்சி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கைக்குண்டு ஒன்றும், கட்சி அலுவலகத்திற்குள் கைக்குண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலும், குண்டு வெடிக்காததால், நடக்கவிருந்த அழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்சி அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, நாட்டில் தற்போது தேர்தலுக்கு முகங்கொடுக்க பிரதான கட்சிகள் தயாராகிவரும் நிலையில் கட்சி அலுவலகமொன்றின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement