• Dec 03 2024

திடீரென போராட்டத்தில் குதித்த ஸ்ரீலங்கா ரெலிகொம் ஊழியர்கள்..!

Chithra / Dec 19th 2023, 2:54 pm
image


ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் இன்று  (19) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து, தேசிய  வளங்களை விற்பதை நிறுத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .


 

திடீரென போராட்டத்தில் குதித்த ஸ்ரீலங்கா ரெலிகொம் ஊழியர்கள். ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் இன்று  (19) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து, தேசிய  வளங்களை விற்பதை நிறுத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது . 

Advertisement

Advertisement

Advertisement