• Sep 20 2024

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்! samugammedia

Chithra / Apr 29th 2023, 3:52 pm
image

Advertisement

அமெரிக்காவில் செயற்பட்டு வரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் என்ற செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மற்றுமொரு வேலைத்திட்டமாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரினதும் பங்கேற்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்வு காண முடியும் எனவும், சர்வஜன வாக்கெடுப்பை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சி இலங்கை தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த தீர்மானம் samugammedia அமெரிக்காவில் செயற்பட்டு வரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் என்ற செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மற்றுமொரு வேலைத்திட்டமாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரினதும் பங்கேற்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை இனப்பிரச்சினைக்கு சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்வு காண முடியும் எனவும், சர்வஜன வாக்கெடுப்பை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த புதிய முயற்சி இலங்கை தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement