உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் அபூபக்கர் தர்சின் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவை இன்றைய தினம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரின் கட்டுப்பணத்தை செலுத்திய சிறிலங்கா தொழிலாளர் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் அபூபக்கர் தர்சின் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.இதேவேளை மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவை இன்றைய தினம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.