• May 05 2024

சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பற்றாக்குறைக்கு தீர்வு! பெல்ஜியம் உடன் கைகோர்க்கும் இலங்கை

Chithra / Mar 4th 2024, 8:09 am
image

Advertisement

 

பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் குத்தகை அடிப்படையில் சிறிலங்கன் எயார்லைன்ஸில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. 

சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது நிலவும் விமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நடவடிக்கை, பயணிகளுக்கான தரமான சேவையை உறுதிப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், Fitz Airஇன் A.320 ரக விமானமும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏ-330-200 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த பெல்ஜியத்தின் விமானங்கள் பெல்ஜிய எயார்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றன.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பற்றாக்குறைக்கு தீர்வு பெல்ஜியம் உடன் கைகோர்க்கும் இலங்கை  பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் குத்தகை அடிப்படையில் சிறிலங்கன் எயார்லைன்ஸில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது நிலவும் விமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நடவடிக்கை, பயணிகளுக்கான தரமான சேவையை உறுதிப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பெல்ஜியம் எயார்லைன்ஸின் இரண்டு விமானங்கள் சிறிலங்கன் எயார்லைன்ஸில் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.அத்துடன், Fitz Airஇன் A.320 ரக விமானமும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஏ-330-200 ஏர்பஸ் வகையைச் சேர்ந்த பெல்ஜியத்தின் விமானங்கள் பெல்ஜிய எயார்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement