• Aug 18 2025

மலேசியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கையர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Chithra / Aug 17th 2025, 10:23 am
image

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மலேசியாவின் -  புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த போதே, இந்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

ஹெரோயின் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 4 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மலேசியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கையர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் -  புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளார். பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த போதே, இந்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். ஹெரோயின் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 4 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement