• Nov 14 2024

இலங்கையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் - தொடரும் விசாரணைகள்

Chithra / Jul 17th 2024, 8:49 am
image

 

அம்பலாங்கொட, கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்மிக்க நிரோஷன வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

41 வயதில் காலமான தம்மிக்க நிரோஷன இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், அண்மையில் டுபாயில் இருந்து வந்த நிலையில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

கொல்லப்பட்ட தம்மிக்க நிரோஷன, இதற்கு முன்னர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட தம்மிக்க நிரோஷனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அம்பலாங்கொடைபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


இலங்கையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் - தொடரும் விசாரணைகள்  அம்பலாங்கொட, கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.2022ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்மிக்க நிரோஷன வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.41 வயதில் காலமான தம்மிக்க நிரோஷன இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், அண்மையில் டுபாயில் இருந்து வந்த நிலையில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.கொல்லப்பட்ட தம்மிக்க நிரோஷன, இதற்கு முன்னர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.படுகொலை செய்யப்பட்ட தம்மிக்க நிரோஷனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அம்பலாங்கொடைபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement