• Sep 20 2024

சிங்கப்பூரில் எட்டாவது மாடியில் இருந்து குதித்த இலங்கை பணிப்பெண்! samugammedia

Tamil nila / May 19th 2023, 7:03 am
image

Advertisement

சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நடிகா தில்ஹானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து குறித்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த பெண் தான் பணிபுரிந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், இலங்கை செல்ல விரும்புவதாகவும் தனது தோழிக்கு வாட்ஸ்அப் குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மரணத்தை தற்கொலையாக ஏற்க மாட்டோம் என நடிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து சிங்கப்பூரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் எட்டாவது மாடியில் இருந்து குதித்த இலங்கை பணிப்பெண் samugammedia சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நடிகா தில்ஹானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து குறித்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.உயிரிழந்த பெண் தான் பணிபுரிந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், இலங்கை செல்ல விரும்புவதாகவும் தனது தோழிக்கு வாட்ஸ்அப் குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த மரணத்தை தற்கொலையாக ஏற்க மாட்டோம் என நடிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து சிங்கப்பூரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement