குருணாகல், வாரியப்பொல, வல்பாலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சுத்தியலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்பாலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருடன் பிடிப்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது பிடிப்பட்ட திருடன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.
பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருடன் இல்லை எனவும் அவர் சந்தேக நபரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் சந்தேக நபரின் மனைவியை பார்ப்பதற்காக குறித்த வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் வீட்டிற்குள் மறைந்திருந்த சந்தேக நபர் அவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் கள்ளக்காதலனை சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் நடந்த கொடூரம் குருணாகல், வாரியப்பொல, வல்பாலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சுத்தியலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.வல்பாலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருடன் பிடிப்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது பிடிப்பட்ட திருடன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருடன் இல்லை எனவும் அவர் சந்தேக நபரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்டவர் சந்தேக நபரின் மனைவியை பார்ப்பதற்காக குறித்த வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் வீட்டிற்குள் மறைந்திருந்த சந்தேக நபர் அவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.