• Sep 20 2024

வெளிநாடுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்துவிட்டு அகதி முகாமில் பதுங்கிய இலங்கையர்! SamugamMedia

Chithra / Mar 13th 2023, 10:40 pm
image

Advertisement

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 23 பேரிடம் தலா ரூ 6 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாக தப்பி  சென்ற இலங்கை நபரிடம்  பணம் கொடுத்து ஏமாந்தவர் ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உட்பட 23 பேர்  தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி  காரணமாக அங்கிருந்து  வெளிநாடுகளுக்கு சென்று பிழைக்கலாம் என அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் தலா ஆறு லட்சம் வீதம் 23 பேர் பணம் கொடுத்து தங்களை எப்படியாவது ருமேனியா, ஆஸ்திரேலியா, கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

23 பேரிடம் தலா ரூ 6 லட்சம் வீதம் பெற்றுக் கொண்ட ஜனார்த்தனன் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் அவர் அங்கிருந்து பொதுமக்களிடம் பெற்ற பணத்துடன் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு அகதியாக படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடிக்கு சென்று  தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் அகதியாக தங்கி இருக்கிறார்.

இலங்கையில் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு அங்கிருந்து கள்ளத்தோணியில் தப்பி அகதியாக இந்தியாவுக்கு  சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறி இலங்கையில் பணம் கொடுத்து ஏமாந்த ஜெயக்குமார் என்பவர் விமானம் மூலம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு  சென்று  மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயக்குமார் அளித்த  புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று (13) ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

இலங்கையில் குற்றச் செயல்கள் புரிந்து விட்டு அகதிகள் போர்வையில் தமிழகத்துக்கு தப்பி வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் போலீசார் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


வெளிநாடுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்துவிட்டு அகதி முகாமில் பதுங்கிய இலங்கையர் SamugamMedia இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 23 பேரிடம் தலா ரூ 6 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாக தப்பி  சென்ற இலங்கை நபரிடம்  பணம் கொடுத்து ஏமாந்தவர் ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உட்பட 23 பேர்  தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி  காரணமாக அங்கிருந்து  வெளிநாடுகளுக்கு சென்று பிழைக்கலாம் என அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் தலா ஆறு லட்சம் வீதம் 23 பேர் பணம் கொடுத்து தங்களை எப்படியாவது ருமேனியா, ஆஸ்திரேலியா, கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.23 பேரிடம் தலா ரூ 6 லட்சம் வீதம் பெற்றுக் கொண்ட ஜனார்த்தனன் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் அவர் அங்கிருந்து பொதுமக்களிடம் பெற்ற பணத்துடன் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு அகதியாக படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடிக்கு சென்று  தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் அகதியாக தங்கி இருக்கிறார்.இலங்கையில் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு அங்கிருந்து கள்ளத்தோணியில் தப்பி அகதியாக இந்தியாவுக்கு  சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறி இலங்கையில் பணம் கொடுத்து ஏமாந்த ஜெயக்குமார் என்பவர் விமானம் மூலம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு  சென்று  மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஜெயக்குமார் அளித்த  புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று (13) ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.இலங்கையில் குற்றச் செயல்கள் புரிந்து விட்டு அகதிகள் போர்வையில் தமிழகத்துக்கு தப்பி வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் போலீசார் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement