• Nov 25 2024

13 கோடி மக்கள் மனதில் இடம் பிடித்த இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞன்

Chithra / May 6th 2024, 8:14 am
image

  

இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சீனாவில் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.

கம்பளை - நுவரெலியா வீதியில் பூங்கொத்துக்களை விற்கும் வியாபாரியான திலிப் மதுசங்க என்பவரின் காணொளியே இவ்வாறு வைரலாகியுள்ளது.

கொத்மலையை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான இவர், 8 வருடங்களாக நாள்தோறும் 15 கிலோ மீட்டர் வரை பூங்கொத்துக்களை கையிலேந்தியப்படி,

வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்திற்கு தன் ஓட்டத்தை ஈடுசெய்து, பயணிகளிடம் அப்பூக்கொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தில் தன் குடும்பத்தின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இலங்கை வந்திருந்த சீன பெண்ணிற்கு பூக்கொத்துக்களை விற்பனை செய்த போது அப்பெண்ணின் கமராவில் பதிவான காட்சிகள் இப்பொது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும், இவர் பூக்கொத்துக்களை சுமந்து கொண்டு இருக்கும் கார்ட்டூன் சித்திரங்களும் சீனர்களுக்கு மத்தியில் பகிரப்பட்டு பிரபல்யமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

13 கோடி மக்கள் மனதில் இடம் பிடித்த இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞன்   இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சீனாவில் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.கம்பளை - நுவரெலியா வீதியில் பூங்கொத்துக்களை விற்கும் வியாபாரியான திலிப் மதுசங்க என்பவரின் காணொளியே இவ்வாறு வைரலாகியுள்ளது.கொத்மலையை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான இவர், 8 வருடங்களாக நாள்தோறும் 15 கிலோ மீட்டர் வரை பூங்கொத்துக்களை கையிலேந்தியப்படி,வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்திற்கு தன் ஓட்டத்தை ஈடுசெய்து, பயணிகளிடம் அப்பூக்கொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தில் தன் குடும்பத்தின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் இலங்கை வந்திருந்த சீன பெண்ணிற்கு பூக்கொத்துக்களை விற்பனை செய்த போது அப்பெண்ணின் கமராவில் பதிவான காட்சிகள் இப்பொது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.மேலும், இவர் பூக்கொத்துக்களை சுமந்து கொண்டு இருக்கும் கார்ட்டூன் சித்திரங்களும் சீனர்களுக்கு மத்தியில் பகிரப்பட்டு பிரபல்யமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement