• Nov 28 2024

தாக்குதலுக்குள்ளாகும் இந்திய கடற்றொழிலாளர்கள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை கடற்படை!

Chithra / Feb 11th 2024, 11:00 am
image



000000000



00000000000

 


00000000000

 


 

இந்திய கடற்றொழிலாளர்களை இனந்தெரியாதவர்கள் தாக்குவதாகவும், அவர்களின் மீன்பிடி கப்பல்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து தமிழகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இதனை தடுப்பதற்கு இலங்கை கடற்படை சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும் இது சாத்தியமில்லாத போதே சிலர் கைது செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கடற்படையினர் ஒருபோதும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.

குறித்த அத்துமீறல் நடவடிக்கைகள் உள்ளூர் மீனவர்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் நாட்டின் கடல் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல் மாத்திரமே விடுக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறலாம் ஆனால் அது நிச்சயமாக தமது கண்காணிப்பில் இல்லை என்றும் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

தாக்குதலுக்குள்ளாகும் இந்திய கடற்றொழிலாளர்கள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை கடற்படை 00000000000000000000 00000000000  இந்திய கடற்றொழிலாளர்களை இனந்தெரியாதவர்கள் தாக்குவதாகவும், அவர்களின் மீன்பிடி கப்பல்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து தமிழகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இதனை தடுப்பதற்கு இலங்கை கடற்படை சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.எனினும் இது சாத்தியமில்லாத போதே சிலர் கைது செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.இதன்போது கடற்படையினர் ஒருபோதும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.குறித்த அத்துமீறல் நடவடிக்கைகள் உள்ளூர் மீனவர்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் நாட்டின் கடல் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல் மாத்திரமே விடுக்கப்படுகிறது.சில சந்தர்ப்பங்களில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறலாம் ஆனால் அது நிச்சயமாக தமது கண்காணிப்பில் இல்லை என்றும் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement